24 மணி நேரத்தில் கொரோனா ரிசல்ட் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கும் நடைமுறையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக, 2 பேட்டரி கார்களையும் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது:

’சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கட்டுக்குள்தான் உள்ளது.

கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு முன், சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தேவைப்பட்டால், கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பாடகர் எஸ்.பி.பி., எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிக்சைக்கு தேவையான வசதிகளை வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்’ என அமைச்சர் கூறினார்.