பிரபல தடகள வீராங்கனைக்கு கொரோனா

இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸ். 21 வயதான இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 2018 ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400மீ தூரத்தை 50.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தவர் ஹீமா தாஸ்.

இந்த மாத இறுதியில் தடகளத்திற்கான தேசிய முகாம் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் தொடங்க உள்ளது. இதற்கு தயாராகும் வீதமாக முகாமிற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தார் ஹீமா தாஸ். இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:

எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது .நான் தற்போது தனிமையில் இருக்கிறேன். எனது உடல்நிலை சீராக உள்ளது. இந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட மேலும் வலிமையாக மீண்டு வர நான் முயற்சி செய்வேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்