இந்தியாவில் இன்று புதிதாக 20,021 பேருக்கு கொரோனா

FILE PHOTO: A doctor in a protective chamber takes a swab from a man to test for coronavirus disease (COVID-19) at a newly installed Walk-In Sample Kiosk (WISK) in a government-run hospital in Chennai, India, April 13, 2020. REUTERS/P. Ravikumar/File Photo

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,07,871 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,47,901 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 21,131 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,82,669 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,77,301 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 16 கோடியே 88 லட்சத்து 18 ஆயிரத்து 054 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 7,15,397 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.