காமன்வெல்த் மகளிர் ஆக்கி : ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ..! இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்தியா தனது முதல் 2 ஆட்டங்களில் கானா,வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்திய மகளிர் அணி முனைப்பு காட்டும் .இந்தியா -இங்கிலாந்து மோதும் இந்த ஆக்கி போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.