காமன்வெல்த் மகளிர் ஆக்கி – அரையிறுதியில் இந்திய அணி தோல்வி

ice hockey player silhouette on grunge background

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன . பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடியது.ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது. இண்டாவது பாதி ஆட்டத்தின்போது இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன. வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.