காமன்வெல்த் நீளம் தாண்டுதல் : இந்திய வீரர்கள் முரளி ஸ்ரீசங்கர் ,முகமது அனீஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடந்த தகுதி சுற்றில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.05 மீட்டர் தாண்டினார்.இதனால் அவர் காமன்வெல்த் போட்டியின் நீளம் தாண்டுதல் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.மற்றொரு இந்திய வீரர் முகம்மது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.