காமன்வெல்த்: டேபிள் டென்னிசில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கம் வென்று அசத்தல்…!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 21 வெண்கலம் என 51 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸில் இறுதி ஆட்டத்தில் இந்திய ஜீடி ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா மலேசியாவின் ஜாவன் சூன் – கரேன் லைனை எதிர் கொண்டனர். இந்த போட்டியில் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி 3-1 என்ற கணக்கில் ஜாவன் சூன் – கரேன் லைனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.