காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் ரோகித் காலிறுதிக்கு முன்னேற்றம்…!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், ஆண்களுக்கான ( 67 கிலோ) குத்துச்சண்டை போட்டியில் ரோகித் டோகாஸ் கானாவின் ஆல்பிரட் கோட்டியை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் இந்தியாவின் ரோகித் 5-0 என்ற கணக்கில் ஆல்பிரட் கோட்டியை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரோகித் டோகாஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.