டிவியில் வகுப்பு வாரியாக பாடமும்.. மருத்துவ தேர்வு தள்ளிவைப்பும்..

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

14 தொலைக்காட்சிகளின் மூலம், ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதல் முறையாக, தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான்.

மேலும் பள்ளித் திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது’ என்றார்.

மருத்துவத் தேர்வுகள் :

இந்நிலையில், ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் நடக்க இருந்த முதுகலை மருத்துவத் தேர்வுகள்,

3 மாதங்கள் தள்ளி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவித்துள்ளார்.