செஸ் ஒலிம்பியாட் – 7வது சுற்று : தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. ஓபன் (வீராங்கனைகளும் ஆடலாம்), பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதில் நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் இந்திய ‘பி’ அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா,கியூபா வீரர் இசான் ரெய்னால்டோ ஆகியோர் மோதினர். இதில் கியூபா வீரர் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41-வது நகர்தலில் ரெய்னால்டோவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.