செங்கல்பட்டு மாவட்டம்: 65 அணிகள் பங்கேற்கும் கைப்பந்து போட்டி தொடங்குகிறது

செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சாய்ராம் நிறுவனம் ஆதரவுடன் மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் 29-ந் தேதி வரை நடக்கிறது.

ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொள்கின்றன. மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் ஐ.ஜி. ஆர்.தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம்.அழகேசன், செயலாளர் ஏ.மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.