ஓய்வில் கேப்டன் கோலி?

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் செய்தது. நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. பின்பு அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, செவ்வாய்க்கிழமை கவுண்டி லெவன் அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் மோதியது. எனினும் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோர் உடல்நல பாதிப்பால் ஓய்வு எடுத்தனா். பதிலி வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கானுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஏற்கெனவே ஷமி, இஷாந்த், அஸ்வின் ஆகியோர் ஓய்வெடுத்து வருகின்றனா்.