கார்த்திக் தியாகியை பாராட்டிய பும்ரா

பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரபல வீரர் பும்ரா.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ட்விட்டரில் கூறியதாவது, ‘என்ன ஒரு ஓவர் கார்த்திக் தியாகி. அப்படியொரு அழுத்தமான கட்டத்தில் பதற்றப்படாமல் நிதானமாக இருந்து பணியைச் சிறப்பாக முடித்துள்ளார். அற்புதம். மிகவும் ஈர்த்துள்ளார் என்றார். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் பிரசாத், அபினவ் முகுந்த் போன்ற பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் கார்த்திக் தியாகிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.