பிரிட் இசை விருது விழா

இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொள்பவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே அனைவரும் கலந்து கொண்டனர்.
கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடத்தப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவ்விருது விழாவில், பெண்களே உயரிய விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தினர். டுயா லிபா, லிட்டில் மிக்ஸ், டெய்லர் ஷிப்ட் ஆகியோர் உயரிய விருதுகளை வென்றனர்.