குத்துச்சண்டை போட்டி: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 105 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டகுத்துச்சண்டை வீரர்கள் களமிறங்குகின்றனர். வீரர்கள் காலிறுதி நிலைக்குச் செல்ல சில பிரிவுகளில் குறைந்தது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இதில் இந்திய குத்துச்சண்டை வீரர் ஆகாஷ் சங்வான் (67 கிலோ) தனது தொடக்க ஆட்டத்தில் துருக்கியின் பர்கான் அடெமை 5-0 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அறிமுக வீரர் ரோஹித் மோர் (57 கிலோ) தொடக்கச் சுற்றில் ஈக்வடாரின் ஜீன் கெய்செடோவை 5-&0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.