ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ஜூனியர் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை விஷ்ணு ரதி, மங்கோலியாவின் ஒட்கான்பாத் யெசுன்குலெனை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சரமாரியாக குத்துவிட்ட விஷ்ணு ரதி 2 நிமிடத்துக்குள் எதிராளியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை தானு 5-0 என்ற கணக்கில் நேபாளத்தின் சோஸ்திகாவையும், 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை நிகிதா சந்த் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முகுசா டாஹிரோவாவையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
Latest article
பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி..!!
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ்...
பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் இன்று தொடக்கம்
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் 28-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. இதில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: டொமினிக் திம், ஜாபியர் அதிர்ச்சி தோல்வி
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. களிமண்தரை போட்டியான இதில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர்...
மும்பை அணிக்கு நன்றி: விராட்கோலி நெகிழ்ச்சி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில்...
தாமஸ் கோப்பையை வென்று சாதித்த பேட்மிண்டன் வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு
சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் இந்திய அணி, பலம்வாய்ந்த இந்தோனேஷியாவை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில்...