பறவை காய்ச்சல்: நாமக்கல்லில் தினமும் 2 கோடி முட்டைகள் தேக்கம்

பறவைக் காய்ச்சலை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் குட்டநாடு, கார்த்தகாபள்ளி தாலுகாக்களில் பறவைகளின் இறைச்சி, மற்றும் முட்டை ஆகியவற்றின் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் சுற்றுவட்டார கோழிப்பண்ணைகளிலிருந்து நாள்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் மற்றும் பிராய்லர் கோழிகள் கேரளாவுக்கு செல்கின்றன. பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் முட்டை கொள்முதலுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் தினமும் முட்டைகள் தேக்கம் அடைய வாய்ப்பு உள்ளது.

இதை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்கிடையே அனைத்து பண்ணைகளிலும் கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாக வருவதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்தனர்.