பைக் கத்துக்கிறேன் – மானு பாக்கர்

இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் பைக் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மானு பாக்கர், 2018 காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றவர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மைதானங்களுக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்திய போதும், போட்டிகள் இல்லாததால் வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பைக்கில் உட்கார்ந்திருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டு, ‘சைக்கிள், ஸ்கூட்டி, கார் என எல்லாம் ஓட்டிப் பார்த்தாயிற்று. பைக் ஏறக்குறைய கற்றுவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.