சுக்கான் கீரை நன்மைகள்

சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது.

சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும். சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.

சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத்

மது, புகை, போதை வஸ்துக்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஈரல் வெகுவிரைவில் பாதிக்கப்படும். இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.

சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நமது உடலில் உயிர் இருப்பதற்கு முக்கிய காரணமாக உடலில் ஓடக்கூடிய இரத்தம் இருக்கிறது. இந்த இரத்தத்தில் நச்சுக்கள் இல்லாமல் தூய்மையாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுக்கான் கீரை இயற்கையிலேயே இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் சட்னி பதத்தில் அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும்.

இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்து துடிக்கும். இந்த துடிப்புகளிள் மாறுபாடுகள் ஏற்படுமானால் உடலில் ஏதோ ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் தினந்தோறும் சுக்கான் கீரையை சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலமாகி, அதன் இயக்கம் சீராகும்.

உலகில் பலரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோயாக ஆஸ்துமா நோய் இருக்கிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் பல நேரங்களில் சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக சுக்காங்கீரை இருக்கிறது. இந்த சுக்கான் கீரையை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு நான்கு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கடுமை தன்மை குறைந்து சீராக சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது.