4-ஆவது சுற்றில் பென்சிச், குவிட்டோவா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸின் மகளிர் பிரிவு 3-ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச், செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் பென்சிச், டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயேருக்கு எதிரான ஆட்டத்தில் 7-6 (7/2), 4-3 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது, ஜாபுயேர் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இதையடுத்து பென்சிச் வென்றதாக அறிவிக்கப்பட்டார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் வெரோனிகா குதர்மெடோவாவை எதிர்கொண்டார், போட்டித்தரவரிசையில் 9-ஆவது இடத்திலிருக்கும் பெட்ரா குவிட்டோவா. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் குவிட்டோவா 6-3, 4-6, 6-4 என்ற செட்களில் வென்றார்.