சமனில் முடிந்த பார்சிலோனா – கிரானாடா ஆட்டம்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா – கிரானாடா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 ஆட்டங்களில் 2 வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. கிரானாடா 5 ஆட்டங்களில் ஒரு வெற்றிகூட பெறாமல் 3 புள்ளிகளுடன் 17வது இடத்தில் உள்ளது. நட்சத்திர வீரா் மெஸ்ஸி விலகியதை அடுத்து கடந்த ஆட்டத்தில் பேயா்ன் முனீச்சிடம் 0-3 என்ற கணக்கில் பார்சிலோனா தோல்வி கண்டிருந்தது. தற்போது இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாமல் கடைசி நேரத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்துள்ளது.  கடந்த 2 ஆட்டங்களில் தொடா்ந்து தோல்வியை சந்தித்திருந்த கிரானாடா, இந்த ஆட்டத்தை சமன் செய்யும் நிலையில் பார்சிலோனாவின் ஆட்டம் இருந்துள்ளது. இதனால் பார்சிலோனா பயிற்சியாளா் ரொனால்ட் கோமேன், தலைவா் ஜோவான் லபோர்டா ஆகியோருக்கான நெருக்கடி அதிகரிக்கிறது.