541 ரன்கள் குவித்து வங்காளதேசம் ‘டிக்ளேர்’

Bangladesh Cricket

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 173 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முஷ்பிகுர் ரஹிம் 68 ரன்னுடனும், தஸ்கின் அகமது 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 73 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணாரத்னே 85 ரன்னுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 26 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.