கால்பந்தின் சிறந்த வீராங்கனை பாலதேவி

Football.

அகில இந்திய கால்பந்து சங்கம் (ஏஐஎப்எப்) செவ்வாய்க்கிழமை அறிவித்த மகளிர் கால்பந்து விருதுகள் பட்டியலில், இந்திய அணியின் பார்வா்ட் பாலதேவி நிகழாண்டின் சிறந்த வீராங்கனையாக தோ்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வீராங்கனை மணிஷா வளரும் சிறந்த வீராங்கனை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்திய மகளிர் கால்பந்து அணியின் தேசிய தலைமைப் பயிற்சியாளராக இருந்த மேமோல் ராக்கி, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகள் அவரது மேற்பார்வையில் இந்திய அணி, சாஃப் மகளிர் சாம்பியன், தெற்காசிய போட்டிகளில் இந்தியா பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.