கழற்றிவிடப்பட்ட அஸ்வின்… களத்துக்கு வந்த ரவி பிஷ்னோய்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு கமிட்டியினர் நேற்று தேர்வு செய்தனர். இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்தியவரான 21 வயதான ரவி பிஷ்னோய் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஆவார். இதேபோல் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்து மீண்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புகிறார்கள். தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்துள்ள ரோகித் சர்மா அணியை வழிநடத்த உள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பெரிய அளவில் சோபிக்காத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கழற்றிவிடப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.