டூப் போடாமல் சண்டைக்காட்சியில் நடித்து காயமடைந்த ஆர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆர்யா நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது டூப் போடாமல் நடித்த ஆர்யா, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்யா, சிகிச்சை முடிந்த கையோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து எஞ்சியுள்ள சண்டைக் காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார். தன்னால் படப்பிடிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்ற காரணத்துக்காக வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.