தமிழில் ரீமேக் ஆகும் அஞ்சாம் பத்திரா?

மலையாள படங்களுக்கு தென்னிந்தியா மட்டுமில்லாமது இப்போது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வருடத்துக்கு குறைந்தது 10 மலையாளப் படங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில் இப்போது அஞ்சாம் பத்திரா என்ற த்ரில்லர் திரைப்படம் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தியில் ரீமேக் வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்போது தமிழிலும் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.