முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன், 133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பைப் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இதய சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 49 வயது முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து முரளிதரன் இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.