2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர்…!

ஸ்பெயியினில் மாட்ரிட் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி நடந்தது.  அதன் இறுதிப்போட்டியில் உலகின் 6ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி),   உலகின் 9ம் நிலை வீரர் மேட்டியோ   பெரெட்டினி(இத்தாலி) ஆகியோர் மோதினர்.  இருவரும்  ஆரம்பம் முதலே வெற்றிக்கு வேகம் காட்டினர். அதனால் முதல் சுற்றில் இருவரும் மாறி, மாறி புள்ளிகளை குவித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும்  6-6 என சமநிலையில் இருந்தனர்.

அதனால்   டைபிரேக்கர் வரை நீண்ட முதல்  செட்டை   மேட்டியோ  7-6 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். முதல் சுற்றில் அதிக வேகம் காட்டியதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக மேட்டியோ அடுத்த  செட்களில்  தடுமாறினார்.  எனவே அலெக்சாண்டர் அடுத்த 2 செட்களையும் 6-4, 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.  சுமார் 2 மணி 40நிமிடங்கள் நீண்ட   இறுதிப்போட்டியில்  அலெக்சாண்டர் 2-1 என்ற செட்களில் வென்றதுடன் 2வது முறையாக  மாட்ரிட் ஓபன் கோப்பையை வென்றுள்ளார்.