ஆடுகளம் சர்ச்சைக்கு அக்சர் பதில்

2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில் அக்சர் படேல் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது
ஆடுகளம் குறித்து பேசினால், எந்த பந்தும் ஹெல்மட்டைத் தாக்கியதாகத் தெரியவில்லை. இயல்பாகவே பந்து சுழன்றது. நாங்களும் அதே ஆடுகளத்தில்தான் விளையாடி ரன் குவிக்கிறோம். அதனால், ஆடுகளம் இப்படி இருந்தது, அப்படி இருந்தது என யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது என நினைக்கிறேன்.
மேலும் நாங்கள் வெளிநாடுகள் செல்லும்போது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடும்போது புற்கள் நிறைய உள்ளன என்பதுபோன்ற புகார் அளித்ததில்லை. ஆடுகளம் குறித்து சிந்திப்பைத் தவிர்த்து சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. அதனால், கூடுதலாக எதையும் செய்ய வேண்டும்.
பந்தை கைகளிலிருந்து மெதுவாக விடுவித்தால், மெதுவாக வீசும் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதளவில் உதவி இருக்காது. எனவே, சரியான வேகத்தில் பந்தை பிட்ச் செய்வது முக்கியம். அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். பந்தை மெதுவாக வீசும்போது பேட்ஸ்மேன் கால்களைத் தகுந்தார்போல் நகர்த்தி எதிர்கொண்டு விடுவார்.

நாங்கள் விளையாடும்போது வெளி உலகத்தைப் பொருட்படுத்திக்கொள்ள மாட்டோம். நாங்கள் சாதாரண கிரிக்கெட்டைதான் விளையாடினோம். இது 4-வது நாளாக இருந்திருந்தால் டிக்ளேர் செய்வது குறித்து சிந்தித்திருப்போம். ஆனால், 3-வது நாள்தான் என்பதால் எங்களுக்குக் கூடுதல் நேரம் உள்ளது. எனவே கூடுதல் நேரம் பேட் செய்ய நினைத்தோம்.

நானும் அஸ்வினும் நிறைய கிரிக்கெட் ஒன்றாக விளையாடியுள்ளோம். மனநிலை குறித்து அவரிடமிருந்து நிறைய படித்துள்ளேன். நாங்கள் வெவ்வேறு விதமாக பந்துவீசுவதால் மனநிலை குறித்தும், பல்வேறு பேட்ஸ்மேன்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும்தான் பொதுவாக பேசுவோம் என்றார் அஸ்வின்.