அக்சர் பட்டேல் நீக்கம்

இங்கிலாந்து அணியை வெற்றி கொள்ளும் நோக்கில் இந்திய அணி விளையாட உள்ளது.  இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பட்டேல் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.  இதுபற்றி பி.சி.சி.ஐ. வெளியிட்ட செய்தியில், பயிற்சி மேற்கொண்டபொழுது, பட்டேலுக்கு இடது முழங்காலில் வலி இருக்கிறது என கூறினார் என தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ.யின் மருத்துவ குழு அக்சர் பட்டேலை தொடர்ந்து கவனிக்கும்.  அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பற்றிய விரிவான அறிக்கைகள் பின்னர் வெளிவரும்.