ஆமதாபாத் ஆடுகளம் ‘சராசரி’: ஐசிசி மதிப்பீடு

இந்தியா-இங்கிலாந்தின் பகலிரவு டெஸ்ட் நடைபெற்ற ஆமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் சராசரியானது என்று ஐசிசி மதிப்பீடு வழங்கியுள்ளது.

இரு நாள்களில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த ஆடுகளம் குறித்து பரவலாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், ஐசிசி இவ்வாறு மதிப்பிட்டுள்ளது. இதனால் ஆட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படும் வாய்ப்புகளில் இருந்து ஆமதாபாத் மைதானம் தப்பியுள்ளது.

ஐசிசி-யின் விதிகள் மற்றும் வரைமுறைகள் பிரிவில் வெளியான மதிப்பீட்டில், 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றபோது ஆடுகளம் சராசரியாக இருந்ததாகவும், கடைசி டெஸ்ட் நடைபெற்றபோது நல்ல முறையில் இருந்ததாகவும், முதல் டி20 ஆட்டத்தின்போது சிறப்பான முறையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா தொடரின் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்ற சிட்னி மைதான ஆடுகளமும் சராசரியானது என்றே ஐசிசி மதிப்பீடு செய்துள்ளது. சா்வதேச அளவில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் முடிந்த பிறகு ஐசிசியின் போட்டி நடுவா் ஆட்டம் நடைபெற்ற ஆடுகளத்தை மதிப்பீடு செய்து ஐசிசிக்கு அறிக்கை அளிப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.