உலக சாதனையை வீழ்த்திய, கிராமத்து விவசாயி..!

மேல ஏறி ஓடுற ஓட்டத்துல                                                                                 குறுக்க மலையே வந்தாலும்,                                                                                       எட்டி உதைச்சா..                                                                                                           ரெண்டா எகிறுமில்லேய்..!
கர்நாடக மாநிலத்தில் மங்களூர் மற்றும் உடுப்பி பகுதியில் பாரம்பரியமான கம்பலா ரேஸ் வருடா வருடம் நடைபெற்று வருகிறது.

சகதி நிறைந்த 100 மீட்டர் கொண்ட ஓடுகளத்தை, எருமை மாடுகளை கட்டிக்கொண்டு வீரர்கள் இரு புறங்களில் இருந்து ஓடுவர். இது வெறும் பாரம்பரிய போட்டியாக இருந்தாலும் உலக போட்டிகளை நெருங்கும் அளவிற்கு வீரர்களின் மின்னல் வேகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்த வருடம் கம்பலா ரேஸில் கலந்துகொண்ட மங்களூரூவைச் சேர்ந்த சீனிவாச கவுடா என்ற இளைஞர், 100 மீட்டர் தொலைவை 9.55 நொடியில் கடந்து வெற்றி பெற்றார். வழக்கமாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கமும் வழங்கப்படும். ஆனால் இந்த போட்டியானது அதற்கு அப்பாற்பட்டது என்பதை சீனிவாசா கவுடா நிரூபித்திருக்கிறார்.

அவரு 9.58 நொடி,                                                                                                 இவரு 9.55 நொடி, எப்டி.! :

ஒலிம்பிக்கில், மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசேன் போல்ட் 100 மீட்டர் தொலைவுக்கான உலக போட்டியில் தங்கம் பெற்றவர். 100 மீட்டர் தொலைவை வெறும் 9.58 நொடிகளில் கடந்து அவர் படைத்த சாதனையை, இன்று வரையிலும் யாரும் முறியடிக்கவில்லை. இந்த நிலையில் சீனிவாச கவுடா 9.55 நொடிகளை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து பாராட்டி கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள் ” வாலிபரின் திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனால், அவரது உத்வேகத்திற்கு ஊக்கம் கொடுக்க ஏதேனும் பயன்படுத்தியும் இருக்கலாம் என்கின்றனர். உள்ளூரில் நடக்கும் பாரம்பரிய போட்டி என்பதால், வாலிபருடைய திறமையை மட்டுமே பார்க்கவேண்டும் எனவும் அவரை பாராட்டி வருகின்றனர். 

இதுகுறித்து சீனிவாச கவுடா தெரிவிக்கும்போது ”மக்கள் என்னை உசேன் போல்ட் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால், நான் ஒரு குறுகிய நெல் வயலில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

வீரருக்கு வாழ்த்துகள் :

நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
சிகரத்தை நோக்கி இருக்கட்டும்                                                                                   உன் கனவும் ஒருநாள் ஜெயிக்கும்பொழுது
தேசியம் புதிதாய் செழிக்கட்டும்.!

முடியாதென்பது மூடன் கணக்கு
முடியும் தோழா வீரனே உனக்கு
ஆலமரத்தின் விதையோ கடுகு
முட்டி மோதி விடு வெற்றி இருக்கு.!