பேட்ஸ்மேனுக்கு ஒரு விதி, பவுலருக்கு ஒரு விதியா.?

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ்பட்லரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்ததால், விமர்சனங்களை சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

‘பவுலர் பந்தை வீசும் முன்பே, எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்து முன்நோக்கிச் செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அப்படி செயல்பட்டு, எடுக்கும் ரன்னை அனுமதிக்கக்கூடாது.

இந்த விஷயத்தில், பேட்ஸ்மேனுக்கு ஒரு விதி, பவுலருக்கு ஒரு விதி என்ற பாரபட்சத்தைக் களைய வேண்டும்‘ என்று வலியுறுத்தி இருக்கிறார்.