’மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்கிறார் ஒரு தலைவர்.. ஏன் தெரியுமா.?

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில், தங்களது அணியின் வெற்றி வாய்ப்பை பட்லரும், வோக்சும் மிக அபாரமாக விளையாடி, வெற்றிபெற்று விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறியுள்ளார்.

பட்லர் 75 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 84 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, அசார் அலி கூறும்போது,

தோல்வி அடைந்தாலும், இன்னும் டெஸ்ட் தொடர் முடிந்து விடவில்லை. மேலும் 2 டெஸ்ட் எஞ்சி இருக்கிறது. இந்த டெஸ்டில் இருந்து, நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்ள முடியும்.

இங்கிலாந்து மண்ணில் நாங்கள் எப்போதும் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறோம். இங்கிலாந்து மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய அணி நாங்கள் தான். இங்கு நாங்கள் தடுமாறுவது கிடையாது. கடைசி இரு டெஸ்டிலும், கடும் சவால் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில்,

‘அருமையான சேசிங். பட்லரும், கிறிஸ் வோக்சும் ஆடிய விதமும், பார்ட்னர்ஷிப்பும் அற்புதம்.

பட்லரின் தந்தை உடல்நலக்குறையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தகைய நிலையிலும், சமாளித்து மனரீதியாக வலுவானவர் என்பதை அவர் காட்டியிருக்கிறார்.

வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார்.