7,44,666 பேர் ஜாமீனில் விடுதலை; ஏன் தெரியுமா.?

மக்களின் ஒத்துழைப்பை வேண்டியும், முகக்கவசம் அணிதல் முக்கியம் எனவும் தமிழக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில், உத்தரவை மீறி, தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும், 7 லட்சத்து 44 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 6 லட்சத்து 82 ஆயிரத்து 985 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 லட்சத்து 55 ஆயிரத்து 806 வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.15,65,25,485 அபராதம் வசூலிக்கப்பட்டதாக, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.