4வது டி20 போட்டி : தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா..! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று மோதல்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 – 1 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4 வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடக்கிறது. இரு அணி வீரர்களுக்கும் விசா கிடைப்பதில் இழுபறி நீடித்ததால் இந்த போட்டிகள் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனைவருக்கும் விசா வழங்கப்பட்டதை அடுத்து 4வது போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி நடக்கிறது.கடந்த போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்துவிட்டார் இதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. தொடரை வெல்ல இந்திய அணியும் ,தோல்விக்கு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும் .இதனால் .இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.