2-வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஜோஸ் பட்லர், ஒல்லி போப், டான் லாரன்ஸ் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சாளர்களில் டாம் பெஸ் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் டாம் பெஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நாளை நடக்க இருக்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இடம் பெறவில்லை.
2-வது போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களின் விவரம்:-
1. ஜோ ரூட், 2. மொயீன் அலி, 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ரோரி பேர்ன்ஸ், 5. பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), 6. ஜேக் லீச், 7. ஒல்லி போப், 8. டாம் சிப்லி 9. பென் ஸ்டோக்ஸ். 10. ஒல்லி ஸ்டோன்ஸ், 11. கிறிஸ் வோக்ஸ், டான் லாரன்ஸ்.