2வடி20 போட்டிது : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி..!

Close-up photo of a cricket ball hitting the stumps and knocking off the bails.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஷ்மதுல்லா ஷஹிதி 36 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணியில் ஜோஷ்வா லிட்டில், மார்க் அடைர், காம்பெர் மற்றும் டெலானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அயர்லாந்து அணியில் பொறுப்புடன் விளையாடிய பால்பரின் 46 ரன்களில் அவுட்டானார். டக்கர் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில், அயர்லாந்து அணி 19-வது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 6 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. டாக்ரெல் 25 ரன்கள் மற்றும் டெலனி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.