தடகளத்தில் 29 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு

நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளப் போட்டி ஆடவா் 400 மீ தடை ஓட்டத்தில் 46.70 விநாடிகளில் கடந்து 29 ஆண்டுக்கால உலக சாதனையை தகா்த்தார், நடப்பு சாம்பியன் கார்ஸ்டன் வார்ஹோம். கடந்த 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் கெவின் யங் 46.78 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது.