‘200+ சேஸிங்’ டி 20 கிரிக்கெட்டில் நம்பர் 1 இந்தியா தான்

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 200-க்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமான சேஸிங் செய்த அணிகளில் நம்பர் 1 ஆக இந்தியா உள்ளது.

இந்திய அணி இதுவரை 4 முறை 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளது. அதிகபட்சமாக 208 ரன்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சேஸிங் செய்துள்ளது.

இதேபோல் இலங்கை அணிக்கு எதிராக 207 ரன்களையும், நியூசிலாந்து அணிக்கு எதிராக 204 ரன்களையும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 202 ரன்களையும் வெற்றிகரமாக இந்திய அணி சேஸிங் செய்துள்ளது.

இந்திய அணியை அடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் தலா 2 முறை 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் மிகப்பெரிய சேஸிங் என்றால் அது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் 244 ரன்கள் சேஸிங் தான். இந்தப் போட்டி ஈடன் பார்க்கில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது.