கொரோனாவை கண்காணித்த 5 மாடி ஹோட்டல், இடிந்து 20 பேர் பலி..!

ஏதோ பேய் படத்தில் வருவதுபோல, கொரோனா வைரஸ் இவருக்கு இருக்கிறதா..? இல்லையா..? என ஆய்வு செய்துவந்த, 5 மாடிக் கட்டிட முகாம் தரைமட்டமானது..! பலியும் பரிதாபமும்  பெருகியது.!!

 

சீனாவின் ஃபுஜியான் மாகாணம், லிச்செங் மாவட்டத்துக்கு உட்பட்ட  குவான்ஸ் நகரில் 5 மாடிகளைக் கொண்ட க்சின்ஜியான் என்ற ஓட்டல், தற்காலிக கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

பல மணி நேர போராட்டம் :

கடந்த 7-ம் தேதி இரவு, இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்தது.
அங்கு தங்கியிருந்த 71 பேர், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும்    100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.