20 ஓவர் கிரிக்கெட்: 62 ரன்னில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி

ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நைம் 23 ரன்களும், கேப்டன் மக்முதுல்லா 19 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்த எளிய இலக்கை கூட நெருங்க முடியாமல் 13.4 ஓவர்களில் வெறும் 62 ரன்னில் சரண் அடைந்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 79 ரன்னில் சுருண்டதே மோசமான ஸ்கோராக இருந்தது. பொறுப்பு கேப்டன் மேத்யூ வேட் (22 ரன்), பென் மெக்டெர்மோட் (17 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.இதன் மூலம் வங்காளதேசம் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.