ஆஸ்திரேலிய அணியில் 19 வயது வீராங்கனை

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் செப்டம்பர் 19-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் 22-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் 24-ந் தேதியும் நடக்கிறது. டெஸ்ட் போட்டி பெர்த்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரையும், 20 ஓவர் போட்டிகள் சிட்னியில் முறையே அக்டோபர் 7, 9, 11 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சு வீராங்கனை மெகன் ஸ்சட், பெலின்டா தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவும், ஆல்-ரவுண்டர் ஜெஸ் ஜானசன் காயத்தாலும் அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஜார்ஜியா ரெட்மைன், 19 வயது வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஸ்டெல்லா கேம்ப்பெல் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.