10,000 டிக்கெட்டுகள் விற்பனை காத்திருக்கும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது போட்டி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான டிக்கெட்டகள் விற்பனை நேற்று முன் தினம் துவங்கிய நிலையில், ஒரு மணி நேரத்திலேயே 10,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

இதையடுத்து வரும் 13ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி சென்னையிலேயே துவங்கி நடைபெறவுள்ளது. 10,000 டிக்கெட்டுகள் விற்பனை இதற்காக கடந்த 8ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய நிலையில், ஒரு மணிநேரத்தில் 10,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.