வலைத்தளத்தில் இருந்து விலகிய டைரக்டர்

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘மாநகரம்’ படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படங்களை இயக்கினார். இந்த படங்கள் வெற்றி பெற்ற நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. விக்ரம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில் “அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்போடு உங்களை சந்திக்க திரும்பி வருவேன்” என தெரிவித்து உள்ளார். விஜய் படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு இருப்பதாகவும் இதற்காகவே வலைத்தளத்தில் இருந்து அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.