மீண்டும் இயக்குனரான தம்பி ராமையா

சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘ராஜா கிளி’. இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார். ‘மாநாடு’, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’. இப்படத்தை நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இயக்குகிறார். ‘சாட்டை’, ‘அப்பா’, ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ், படத்தொகுப்பாளராக ஆர். சுதர்சன் பணியாற்றுகின்றனர். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.