மதுரை வீரர், வீராங்கனைகள்4 பேர் பதக்கம் வென்றனர்

மதுரை வீரர், வீராங்கனைகள்4 பேர் பதக்கம் வென்றனர் மதுரை சென்னையில் 76-வது சீனியர் மாநில நீச்சல் போட்டி நடை பெற்றது. இதில் மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் விக்காஸ் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். போட்டியின் முடிவில் விக்காஸ் 50 மீட்டர் ப்ரிஸ்டையில் தங்கம், 200 மீட்டர் பட்டர் பிளேயில் தங்கம், 100 மீட்டர் பட்டர்பிளேயில் வெள்ளி, 100 மீட்டர் ப்ரிஸ்டையில் வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றார். இதன் மூலம் அவர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். பாரதியார் பல்கலைக்கழகம் சார்பாக மாநில அளவிலான நீச்சல் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் மதுரை நீச்சல் வீரர் மீனாட்சிசுந்தரம் 400 மீட்டர் ப்ரிஸ்டையில் தங்கம், 50, 100, 200 மீட்டர் பேக் ஸ்டோக்கில் தங்கமும், 200 மீட்டர் பட்டர்பிளேயில் வெள்ளி என 5 பதக்கங்களுடன் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் வீராங்கனை அன்னபூர்ணி 200 மீட்டர் பிரஸ் ஸ்டோக்கில் வெள்ளி, 100 மீட்டர் பட்டர்பிளேயில் வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்றார். யுத்திகா 50 மீட்டர் பிரஸ் ஸ்டோர்க்கில் வெண்கலம் பெற்றார். மாநில போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை மாநில நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் நாகராஜ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.