மகளிர் டி20 கிரிக்கெட் – 7 விக்கெட் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணி வெற்றி

மூன்று அணிகள் இடையிலான மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 71 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

லாரா வால்வார்ட், கேப்டன் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

இறுதியில், வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.