பெண்களுக்கு கங்கனா ரணாவத் அறிவுரை

தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்தித்திலும் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பெண்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவில், ”நமது நேரம் வரும் வரை காத்திருக்காமல் பெண்கள் தமக்குத்தாமே நேரத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டும். சுயமாக ஏதோ ஒன்றை சாதித்து காட்ட வேண்டும். அவமானங்கள், தோல்விகள் விரும்பத்தகாத நடவடிக்கை போன்றவற்றை நினைத்து கவலைப்பட கூடாது. அவற்றை நமது திறமையை வளர்த்துக்கொள்வதற்காக உபயோகித்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிராக வரும் விமர்சனங்களை நமது வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வளரும் நேரத்தில் உங்களை நேசிப்பவர்களை பார்த்து சந்தோஷப்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் யார் வில்லன்களாக இருப்பார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களை காமெடியன்களாக பாருங்கள்” என்றார்.