நடு காட்டுக்குள் கரும்பு லாரியை மடக்கிய காட்டுயானைகள்..! ஓட்டுநரின் சாமர்த்திய செயல்

சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை காட்டு யானை வழிமறித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோடு, தமிழக கர்நாடக எல்லையிலுள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே, காட்டு யானை ஒன்று தனது குட்டிகளுடன், கரும்பு லாரியை வழிமறித்து நிறுத்தியது. இதனை தொடர்ந்து யானை குட்டிகள், லாரியில் இருந்த கரும்பை தும்பிக்கையால் எடுத்து தின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் லாரியின் ஓட்டுனர், லாரியிலிருந்த கரும்புகளில் சிலவற்றை சாலையில் தூக்கி வீசி, யானையையும் அதன் குட்டிகளையும் திசை திருப்பிவிட்டார். இதையடுத்து யானைகள் லாரியை விட்டு சென்றதும், ஓட்டுநர் லாரியை இயக்கி தப்பித்தார்.